Mutual fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ. 500 முதல் முதலீடு செய்து நீண்ட கால முதலீடுகளில் அதிக லாபத்தை பெற முடியும்.
Mutual fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ. 500 முதல் முதலீடு செய்து நீண்ட கால முதலீடுகளில் அதிக லாபத்தை பெற முடியும்.
Published on: April 18, 2025 at 9:25 pm
கடந்த காலங்களை விட இன்றைய காலக்கட்டங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அதிகரித்துள்ளன. 7 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட கால திட்டங்களுக்கு ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் சிறந்த லாபத்தை வழங்கி உள்ளன.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை வழங்கும் வகையில் ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பிட்ட மார்க்கெட் கேப் (Market Capitalisation) பிரிவில் மட்டுப்படாமல், லார்ஜ் கேப், மிட் கேப், மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் தன்மை கொண்டவை.
இதனால் சந்தை நிலவரங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் முதலீட்டாளர்களுக்கு ஆபத்து குறைவு. குறிப்பாக சந்தை நிலவரங்கள் மாறும் போதெல்லாம், இந்த ஃபண்ட்கள் போர்ட்ஃபோலியோக்களை மாற்றிக்கொள்வதால் முன்னணி இடங்களை பிடிக்க இயலும்.
கடந்த 10 ஆண்டுகளில், ஒரு தடவையாக ₹2.5 லட்சம் முதலீடு செய்திருந்தால், சில ஃபண்ட்களில் அது ₹14.39 லட்சம் வரை உயர்ந்திருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிக வருமானம் வழங்கிய முதல் 5 ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்
கடந்த 10 ஆண்டுகளில் குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகளில் 19.13% வருடாந்த வருமானம் கிடைத்துள்ளது. ஒரு தடவையில் ₹2.5 லட்சம் முதலீட்டு தொகை ₹14.39 லட்சமாக வளர்ந்துள்ளது.
ஃபிராங்க்ளின் இந்தியா ஃப்ளெக்ஸி கேப்
இந்த ஃபண்டுகள் 17.62% வருமானம் கொடுத்துள்ளது. ஒருமுறை SIP மூலம் ₹2.5 லட்சம் முதலீடு செய்ததன் மூலம், 10 ஆண்டுகளில் இந்த நிதி ₹9,37,000 ஆக வளர்ந்துள்ளது.
JM ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்
JM ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் 10 ஆண்டுகளில் 16.83% வருமானம் கொடுத்துள்ளது. ₹2.5 லட்சம் மொத்தSIP முதலீடு ₹11,84,000 ஆக வளர்ந்துள்ளது.
HDFC ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட்
HDFC ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட் 15.33% வருமானம் கொடுத்துள்ளது. ₹2.5 லட்சம் ஒரு முறை SIP முதலீட்டுடன், இந்த நிதி 10 ஆண்டுகளில் ₹10,40,000 ஆக வளர்ந்துள்ளது.
ஃபிராங்க்ளின் இந்தியா ஃப்ளெக்ஸி கேப்
ஃபிராங்க்ளின் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்டுகள் 14.12% வருமானம் வழங்கியுள்ளது. ஒருமுறை SIP மூலம் ₹2.5 லட்சம் முதலீடு செய்ததன் மூலம், 10 ஆண்டுகளில் இந்த நிதி ₹9,37,000 ஆக வளர்ந்துள்ளது.
இந்த ஃபண்ட்கள் எல்லாமே ₹500, ₹1000, ₹5000 என்ற குறைந்த முதலீட்டு தொகையில் தொடங்க முடியும்.
Disclaimer: (மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன்னர் செபி (இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம்) அங்கீகரித்த முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. முதலீட்டாளர்களின் லாப, நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் பொறுப்பேற்காது)
இதையும் படிங்க மாதம் ரூ.5 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு.. 15 ஆண்டுகளில் எவ்வளவு ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com