Sarbananda Sonowal: தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் இதனை தொடங்கிவைத்தார்.
Sarbananda Sonowal: தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் இதனை தொடங்கிவைத்தார்.

Published on: February 23, 2026 at 8:07 pm
புதுடெல்லி, பிப்.23, 2026: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தூத்துக்குடி துறைமுகத்தில் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டன. கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களை இன்று (பிப்.23, 2026) தொடங்கி வைத்தார்.
முக்கிய திட்டங்கள்:
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், “தமிழர் பண்பாட்டின் தொன்மையான வரலாறு தேசிய விருப்பத்தை பிரதிபலிக்கிறது” என்றார். மேலும், “இந்த பகுதி நூற்றாண்டுகளாக கடல்சார் பாரம்பரியத்தை தேசிய நோக்குடன் தாங்கி வருகிறது” எனவும் அவர் கூறினார். தொடர்ந்து, “புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டிருப்பது, பிரதமர் நரேந்திர மோடி தமிழர் பாரம்பரியத்திற்கு அளிக்கும் ஆழ்ந்த மரியாதையை காட்டுகிறது. தமிழர்களின் ஞானம் நாட்டின் அடையாளமாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
மொத்த முதலீடு
ரூ.3 லட்சம் கோடிக்கும் மேல் கட்டமைப்பு விரிவாக்கம், நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள், தமிழ்நாட்டின் கடல்சார் பாரம்பரியத்தை வலுப்படுத்துவதோடு, துறைமுக வளர்ச்சிக்கும், நிலையான எரிசக்தி முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கிளீன் மேக்ஸ் ஐ.பி.ஓ வெளியீடு.. மார்ச் 2 பட்டியல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com