Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.05 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கும் 4 வங்கிகள் குறித்தும், இந்த வங்கிகள் வழங்கும் ஸ்பெஷல் எஃப்.டி திட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.
Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.05 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கும் 4 வங்கிகள் குறித்தும், இந்த வங்கிகள் வழங்கும் ஸ்பெஷல் எஃப்.டி திட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.
Published on: April 22, 2025 at 10:44 pm
Updated on: April 22, 2025 at 11:27 pm
சென்னை, ஏப்.22 2025: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. இதற்கிடையில், ஸ்பெஷல் எஃப்.டி திட்டங்களுக்கு 8.05 சதவீதம் வட்டி வழங்கும் வங்கி குறித்தும் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.
இந்தியன் வங்கி சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்
இந்தியன் வங்கி, சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களான இந்த் சுப்ரீம் 300 நாள்கள் மற்றும் இந்த் சூப்பர் 400 நாள்கள் ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையான வைப்புத் திட்டங்கள் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 8.05% அதிகபட்ச வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
பஞ்சாப் சிந்த் வங்கி ஸ்பெஷல் எஃப்.டி
பஞ்சாப் & சிந்து வங்கி சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்களாக 333-நாள் மற்றும் 555-நாள் திட்டங்களுக்கு 77.2% மற்றும் 7.45% வட்டி விகிதங்களை வழங்குகிறது. மேலும், முதலீட்டாளர்கள் குறைந்த வட்டி விகிதத்துடன் 444-நாள், 777-நாள் மற்றும் 999-நாள் ஆகிய டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
ஐ.டி.பி.ஐ உத்சஸ் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு ஐ.டி.பி.ஐ வங்கி பல்வேறு காலகட்டங்களில் சிறப்பு எஃப்.டி.களை வழங்குகிறது. அதன்படி, 300 மற்றும் 375 ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் உள்ளன.
இதில் 444 எஃப்.டி திட்டங்களுக்கு பொதுக்குடிமக்களுக்கு 7.25 சதவீதம் வட்டியை வழங்குகிறது. மூத்தக் குடிமக்கள் 7.75 சதவீதம் வட்டியை பெறுவார்கள்.
மேலும், 555 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுகுடிமக்களுக்கு 7.30 சதவீதம் வட்டி வழங்குகிறது. மூத்தக் குடிமக்கள் 7.80 சதவீதம் வட்டி பெறுவார்கள். மேலும், சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் 7.95 சதவீதம் வட்டி பெறுவார்கள். தொடர்ந்து, 700 நாள்கள் உத்ஸவ் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.50 சதவீதமும் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
எஸ்.பி.ஐ அம்ரித் 444 நாள்கள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்
பாரத ஸ்டேட் வங்கி (SBI) அதன் சிறப்பு நிலையான வைப்புத் திட்டமான “அம்ரித் விருஷ்டி”யை 444 நாட்கள் குறிப்பிட்ட கால அவகாசத்துடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
எனினும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு நிலையான வைப்புத் திட்டம் 20 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்த நிலையான வைப்புத் திட்டம் ஏப்ரல் 15, 2025 முதல் அமலுக்கு வருகிறது. 444 நாள் நிலையான வைப்புத் திட்டம் இப்போது பொது குடிமக்களுக்கு ஆண்டுக்கு 7.05% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 7.55% என்ற 50 அடிப்படைப் புள்ளிகள் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இருப்பினும், வங்கி இன்னும் எந்த காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை.
Disclaimer: (இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முதலீடுக்கு முன் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் முதலீடு குறித்து முழுவதுமாக கேட்டு தெரிந்துக்கொள்ளவும். முதலீட்டாளரின் லாப நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை குறைத்த ஹெச்.டி.எஃப்.சி: புதிய வீதத்தை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com