Tax-saving FDs: வங்கிகள் பல்வேறு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், வரி விலக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
Tax-saving FDs: வங்கிகள் பல்வேறு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், வரி விலக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
Published on: March 20, 2025 at 11:12 pm
இந்திய வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதில் வரி விலக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் முதன்மையானவை. பொதுவாக இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் ஐந்து ஆண்டு கால அளவை கொண்டிருக்கும்.
இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் ஆண்டுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் அளவுக்கு வரி விலக்குகள் அளிக்கப்படும். இந்த வரி விளக்குகள் வருமானவரிச் சட்டம் 1961 இன் படி 80c இன் கீழ் வழங்கப்படுகிறது.
ஆர் பி எல் வங்கி
ஆர் பி எல் 500 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 8.50 சதவீத வட்டி விகிதமும் பொது குடிமக்களுக்கு 8 சதவீதமும் வட்டி விகிதம் வழங்கப்படும். இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு வரி விலக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
hdfc 5 ஆண்டு கால பிக்ச டெபாசிட்
hdfc 5 ஆண்டு கால பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பொதுக் குடிமக்களுக்கு ஏழு சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
டிசிபி வங்கி
டிசிபி வங்கியை பொருத்தமட்டில் ஐந்து ஆண்டுகால வரிவிலக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.40 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.90 சதவீத வட்டியும் வழங்கப்படும்.
எஸ் வங்கி
எஸ் வங்கியை பொருத்தமட்டில் ஐந்து ஆண்டுகால வரிவிலக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு எட்டு சதவீத வட்டி வழங்கப்படும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சிறப்பு திட்டங்கள்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அம்ரித் விருஷ்டி என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 444 நாட்கள் கொண்ட இந்த திட்டம் 2025 மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது.
இந்த திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.25% வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியும் வழங்கப்படும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மற்றொரு சிறப்பு திட்டமான அம்ரித் கலாஸ் திட்டத்தில் பொதுக் குடி மக்களுக்கு 7.10 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீத வட்டியும் வழங்கப்படும். இந்த திட்டம் 400 நாட்கள் கால அளவை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க 3 ஆண்டு டெர்ம் டெபாசிட்.. 7 வங்கிகளின் வட்டி விகிதம்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com