Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களின், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதல் தேர்வாக எஸ்.பி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ் ஃபண்ட் உள்ளது. இந்தத் திட்டம் குறித்து பார்க்கலாம்.
Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களின், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதல் தேர்வாக எஸ்.பி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ் ஃபண்ட் உள்ளது. இந்தத் திட்டம் குறித்து பார்க்கலாம்.

Published on: March 16, 2026 at 1:00 pm
சென்னை, மார்ச் 16, 2026: இந்தியாவின் மியூச்சுவல் சந்தையில் நூற்றுக்கணக்கான திட்டங்கள் உள்ளன. இதில், நல்ல மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு முதலீட்டாளர்களுக்கு சவாலாக இருக்கிறது. அந்த வகையில், ஒரு ஃபண்டை தேர்வு செய்யும்போது முதலீட்டாளர்கள் கவனிக்கும் பல காரணிகளில், மதிப்பீடுகள் உள்ளன. எனினும் பல பொருளாதார வல்லுநர்கள் செலவுக் குறியீடுகளை பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றார்கள். ஏனெனில் ஒரு ஃபண்ட்க்கு இது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நேரடி திட்டங்களில் குறைந்த செலவுக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து பார்க்கலாம். அந்த வகையில், எஸ்.பி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ் ஃபண்ட் எப்படி?
இதையும் படிங்க: மியூச்சுவல் ஃபண்ட் ‘இன்ட்ரா டே’ வணிகம்.. செபி சுற்றறிக்கை!
இத்திட்டங்கள் துறை சார்ந்த முதலீடு முதல், பரவலான லார்ஜ்-கேப் மற்றும் மிட்-கேப் பங்குகளில் முதலீடு செய்கின்றன. மேலும், உயர் ரிஸ்க் கேட்டகிரியில் வருகிறது. மேலும், 2015 பிப்ரவரி 26 அன்று தொடங்கப்பட்ட இந்த நிதி, நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீஸ் டி.ஆர்.ஐ குறியீட்டை பின்தொடர்கிறது. இந்தப் ஃபண்ட், தொடக்கம் முதல், சுமார் 15.56% வருமானத்தை வழங்கியுள்ளது.
முக்கிய முதலீடு
இந்த நிதியின் முக்கிய முதலீடு, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (13.46%), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (10.45%), ஆக்சிஸ் வங்கி (9.37%), கோட்டக் மகிந்திரா வங்கி (8.50%), ஹெச்.டி.எஃப்.சி வங்கி (6.80%) ஆகும். இவை அனைத்தும் இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களாகும், மேலும் நிதியின் செயல்திறனை தீர்மானிக்கும் முக்கிய பங்குகளாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐ டி அலுவலகம் அனுப்பிய தவறான தகவல்கள்.. வரி செலுத்தும் நபர்கள் ஷாக்!
Oil Surges to $105 Amid US-Israel War: அமெரிக்கா- ஈரானுக்கு எதிரான போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை $105.15 ஆக உயர்ந்துள்ளது.
Iran Israel War: ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல நிரந்தர ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Madhavaram Encounter: Ganesh Killed: சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி ஆர். கணேஷ் என்ற தொப்பை கணேஷ் மரணமடைந்தார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com