காருண்யா KR-769 லாட்டரி இன்று குலுக்கல்.. முதல் பரிசு ரூ.1 கோடி!

Kerala Lottery Result Today: கேரள காருண்யா KR-769 லாட்டரி இன்று குலுக்கப்படுகிறது; இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

Published on: September 19, 2026 at 12:20 pm

திருவனந்தபுரம், செப்.19, 2026: கேரள மாநில லாட்டரி துறை சார்பில் நடத்தப்படும் காருண்யா KR-769 லாட்டரி குலுக்கல் இன்று (செப்.19, 2026) நடைபெறுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி ஜங்ஷன் அருகேயுள்ள கோர்க்கி பவனில் பிற்பகல் 3 மணிக்கு குலுக்கல் நடைபெற உள்ளது. குலுக்கல் நடைமுறைகள் சுயாதீன அதிகாரிகளின் மேற்பார்வையில் நடத்தப்பட்டு, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தன்மை உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லாட்டரியில் முதல் பரிசாக ரூ.1 கோடி, இரண்டாவது பரிசாக ரூ.25 லட்சம், மூன்றாவது பரிசாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. இதுதவிர, 4-வது பரிசாக ரூ.5,000, 5-வது பரிசாக ரூ.2,000, 6-வது பரிசாக ரூ.1,000, 7-வது பரிசாக ரூ.500, 8-வது பரிசாக ரூ.200, 9-வது பரிசாக ரூ.100 மற்றும் ஆறுதல் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலுக்கல் முடிவுகள் வெளியானதும், Karunya KR-769 லாட்டரியின் வெற்றி எண்களை லாட்டரி சீட்டு வைத்திருப்பவர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். முதல் பரிசு ரூ.1 கோடி என்பதால், இந்த குலுக்கல் முடிவுகளை அறிந்து கொள்ள லாட்டரி சீட்டு வாங்கியவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். வெற்றி பெற்ற சீட்டு வைத்திருப்பவர்கள் பரிசுத் தொகையைப் பெறுவதற்கான கேரள மாநில லாட்டரி துறையின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

லாட்டரி முடிவுகளை காண..

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.

லாட்டரி முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க : சுரங்கம், உலோகம் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு.. மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com