எகிறும் தங்கம் விலை.. ஒரே நாளில் உச்சம்.. இன்றைய நிலவரம் தெரியுமா?

Gold Rate Surge: சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.2,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published on: August 6, 2026 at 11:43 am

சென்னை, ஆக. 6 2026: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 6, 2026) தங்கம் விலை மிகக் கடுமையாக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.2,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,000 என்ற நிலையை எட்டியுள்ளது. அதேபோல், கிராமுக்கு ரூ.270 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரை தங்கம் கிராம் ரூ. 15,000க்கும் சவரன் ரூ. 120,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,200-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 5) ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை அதிகரித்து பெருத்த உயர்வைப் பதிவு செய்தது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும், மாலையில் மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் (கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13,480) விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்திருந்த நிலையில், இன்றைக்கும் அந்த உயர்வு நீடிக்கிறது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, சந்தை நிலவரங்களால் வெள்ளி விலையும் இன்று கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000 (ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்) என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : வெளிநாடுவாழ் தமிழர்கள் முதலீடு ஈர்ப்பு.. புதிய சேவை பிரிவு அறிமுகம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com