Gold Rate Today: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 55 அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளியை பொருத்தமட்டில் மாற்றமில்லை நேற்றைய விலையில் தொடர்கிறது.
Gold Rate Today: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 55 அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளியை பொருத்தமட்டில் மாற்றமில்லை நேற்றைய விலையில் தொடர்கிறது.
Published on: March 5, 2025 at 10:09 am
Updated on: March 6, 2025 at 12:41 am
இன்றைய தங்கம் விலை ( 05-03-2025): சென்னையில் இன்று ( 2025 மார்ச் 5) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ₹ 8,065 ஆகவும்; ஒரு பவுன் தங்கம் ரூபாய் 64,520 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இது கிராமுக்கு ரூபாய் 55 ரூபாய் அதிகரிப்பாகும். மறுபுறம் 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூபாய் 8,798 ஆகவும்; எட்டு கிராம் கொண்ட ஒரு பவுன் ரூபாய் 70 ஆயிரத்து 384 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை எப்படி?
வெள்ளியைப் பொருத்தமட்டில் கிராம் ரூபாய் 107 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் ஆக விற்பனையாகி வருகிறது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நேற்றும் தங்கத்தின் விலை அதிகரித்திருந்த நிலையில் இன்றும் விலை அதிகரித்து காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
மும்பை மற்றும் பெங்களூரு
மும்பை மற்றும் பெங்களூரைபொருத்தவரை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 8,065 ஆகவும், 24 கேரட் தூய தங்கம் கிராம் ரூ. 8,798 ஆகவும் 18 கேரட் தங்கம் கிராம் ரூ. 6,599 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் ரூ. 98 ஆகவும் கிலோ ரூ. 98,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி
டெல்லியைப் பொருத்தவரை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 8,080 ஆகவும் 24 கேரட் தூய தங்கம் ரூ. 8,798 -க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 கேரட் தங்கம் கிராம் ரூ. 6,611-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ரூ. 98 ஆகவும் கிலோ ரூ. 98,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி..12 ராசிகளின் இன்றைய (மார்ச். 05, 2024) பலன்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com