Gold Rate Today: தங்கம் விலை இன்று ( மார்ச் 18 2025) அதிரடியாக உயர்ந்து ஆபரணத் தங்கம் சவரன் ரூ. 66 ஆயிரத்தை எட்டியுள்ளது.
Gold Rate Today: தங்கம் விலை இன்று ( மார்ச் 18 2025) அதிரடியாக உயர்ந்து ஆபரணத் தங்கம் சவரன் ரூ. 66 ஆயிரத்தை எட்டியுள்ளது.
Published on: March 18, 2025 at 1:24 pm
இன்றைய தங்கம் விலை(18-03-2025): தங்கத்தின் விலையில் இன்று ( மார்ச் 18 2025) அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 850 ஆக நிர்ணயிக்கப்பட்டு எட்டு கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 66 ஆயிரம் ஆக விற்பனையாகி வருகிறது.
நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 8210 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு பவுன் தங்கம் 65 ஆயிரத்து 680 ஆக இருந்தது. அந்த வகையில் தங்கத்தின் விலையில் கிராமுக்கு ரூபாய் 40 அதிகரித்துள்ளது. ஆக பவுனுக்கு ரூபாய் 320 அதிகரித்து காணப்படுகிறது.
24 கேரட் தூய தங்கத்தை பொருத்தமட்டில் மார்ச் 17 2025 கிராம் 8,956 ஆக விற்பனையாகி வந்தது. அந்த வகையில் ஒரு பவுன் 24 கேரட் தங்கம் ரூபாய் 71 ஆயிரத்து 648 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தூய தங்கம் ரூபாய் 9000 ஆகவும் எட்டு கிராம் கொண்ட ஒரு பவுன் ₹72,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கிராம் ரூபாய் 113 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் ஆக உள்ளது.
வெள்ளியை பொருத்தமட்டில் மார்ச் ஒன்பதாம் தேதி கிராம் ரூபாய் 108 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ பார் வெள்ளி துபாய் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூபாய் 5000 வரை உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; 300 நாள்கள் முதலீடு செய்தால் போதும்.. 8.05 சதவீதம் வரை வட்டி.. சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் ஸ்கீம்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com