Food: மொறு மொறுன்னு பாகற்காய் பக்கோடா பேக்கரி சுவையில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
Food: மொறு மொறுன்னு பாகற்காய் பக்கோடா பேக்கரி சுவையில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
Published on: March 18, 2025 at 2:20 pm
மொறுமொறுப்பான பாகற்காய் பக்கோடா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் -½ கிலோ
கடலை மாவு -½ கப்
அரிசி மாவு -¼ கப்
பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன்
சீரகத்தூள் -½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ற சேர்க்கவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
செய்முறை
பாகற்காயை இரண்டு மூன்று முறை நன்கு அலசி அதை வட்ட வடிவில் மெலிதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாகற்காயின் நடுவில் உள்ள வெள்ளை பகுதியை நீக்கிவிடவும். நறுக்கி வைத்த பாகற்காயில் சிறிது உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் பாகற்காயில் சிறிது நீர் சேர்த்து இரண்டு முறை கழுவி எடுத்துக் கொள்ளவும்.
உப்பு சேர்த்து கழுவி எடுக்கும் பொழுது பாகற்காயில் கசப்பு குறையும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தண்ணீர் நன்கு கொதித்த பின்னர் சிறிது உப்பு மற்றும் பாகற்காயை சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பாகற்காய் வெந்த பின்னர் தண்ணீரை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இதையும் படிங்க :நான்வெஜ் பிரியர்களுக்கு செம்ம டிரீட்.. மட்டன் கோலா உருண்டை இப்டி செஞ்சு பாருங்க..சுவை நாக்கிலேயே நிற்கும்!
பின்னர் இந்த மாவினை வேக வைத்த பாகற்காய் உடன் சேர்த்து எல்லா பகுதியிலும் படும்படி கலந்து விடவும். மசாலா பாகற்காயின் மீது நன்கு ஒட்ட வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும். மாவினை சிறிது சிறிதாக சேர்த்து பாகற்காயில் நன்கு ஒட்டும்படி கலந்து விடவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அடுப்பு தீயை லோ ஃபிளேமில் வைத்து அதில் தயார் செய்து வைத்த பாகற்காயை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான மொறுமொறுப்பான பாகற்காய் பக்கோடா தயார். இதை டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : ஸ்பெஷலான ஸ்பானிஷ் ஆம்லெட் ; முட்டையை இப்படி செஞ்சு பாருங்க ; சுவை அள்ளும்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com