Sri Lankan Navy: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 3 பேரை கைது செய்துள்ளது. மேலும், படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
Sri Lankan Navy: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 3 பேரை கைது செய்துள்ளது. மேலும், படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
Published on: March 18, 2025 at 1:10 pm
ராமநாதபுரம், மார்ச் 18, 2025: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மூன்று இந்திய மீனவர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18, 2025) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மூன்று மீனவர்களுடன் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகு திங்கள்கிழமை (மார்ச் 17, 2025) இரவு ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டது.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில், இலங்கை கடற்படை, நெடுந்தீவு அருகே வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தமிழக மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஏ. சங்கர் (53), டி. அர்ஜுனன் (35) மற்றும் எஸ். முருகேசன் (49) ஆகியோர் ஆவார்கள்.
கடந்த ஆண்டு முதல் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களை கைது செய்யப்படுவது அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஆண்டு (2025) தொடக்கத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பெரியார் மீதான விமர்சனம்: பல்வேறு இடங்களில் 50 வழக்குகள் பதிவு.. ஐகோர்ட்டில் சீமான் மனு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com