Fixed deposits | 8 சதவீதத்துக்கு மேல் ரிட்டன் கொடுக்கும் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் குறித்து பார்க்கலாம்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Fixed deposits | 8 சதவீதத்துக்கு மேல் ரிட்டன் கொடுக்கும் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் குறித்து பார்க்கலாம்.
Published on: September 12, 2024 at 12:14 pm
Fixed deposits | ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள், இந்தியர்களிடையே பிரபலமான சேமிப்புத் தேர்வாகும். ஏனெனில் அவற்றின் பாதுகாப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் பலரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்கின்றனர். மேலும், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களும் நிறுவனங்களுக்கு நிறுவனங்கள் மாறுபடும். அந்த வகையில், 8 சதவீதத்துக்கு அதிகமாக வட்டி வழங்கும் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் குறித்து பார்க்கலாம்.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ்
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் அதிகப்பட்சமாக 8.47 சதவீதம் வரை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி வழங்குகிறது. இங்கு, 1 ஆண்டு எஃப்.டிக்கு 7.59 சதவீதமும், 3 ஆண்டு டெபாசிட்டுக்கு 8.38 சதவீதமும், 5 ஆண்டு டெபாசிட்டுக்கு 8.47 சதவீதமும் வட்டி வழங்குகிறது.
மகிந்திரா ஃபைனான்ஸ்
மகிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனம் அதிகப்பட்சமாக 8.25 சதவீதம் வரை அதிகப்பட்சமாக வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு டெபாசிட்டுக்கு முறையே 7.50 சதவீதம், 8.10 சதவீதம் மற்றும் 8.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.
மணிப்பால் ஹவுசிங் ஃபைனான்ஸ் சிண்டிகேட் லிமிடெட்
மணிப்பால் ஹவுசிங் ஃபைனான்ஸ் சிண்டிகேட் லிமிடெட் எஃப்.டிக்கு அதிகப்பட்சமாக 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குப்படுகிறது. 1, 3, 5 ஆண்டுகள் முறையே 7.45, 7.75 மற்றும் 7.60 சதவீதம் வட்டி வழங்குகிறது.
பி.என்.பி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்
பி.என்.பி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் அதிகப்பட்சமாக 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிறுவனம் 1,3,5 ஆண்டுகள் எஃப்.டிக்கு முறையே 7.45, 7.75 மற்றும் 7.60 சதவீதம் வட்டி வழங்குகிறது.
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் அதிகப்பட்சமாக 7.90 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 1,3,5 ஆண்டுகள் முறையே எஃப்.டிக்கு 7.45, 7.75 மற்றும் 7.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்: ரூ.80 வரை சரிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com