வரி சலுகை, 10 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன்.. டாப் 5 இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் தெரியுமா?

Top 5 ELSS mutual Funds: கடந்த 10 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்.

Published on: January 11, 2025 at 5:53 pm

Updated on: January 11, 2025 at 5:54 pm

இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் | வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் என்றும் அழைக்கப்படும் ஈக்விட்டி-லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்கள் அதிக வருமானத்திற்கான வாய்ப்பை வழங்குகின்றன. மேலும் அவை முதலீட்டாளர்களுக்கு வரி சேமிப்பின் கூடுதல் நன்மையையும் கொண்டுள்ளன.

பொதுவாக இந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் முதன்மையாக ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான ஸ்கீம்களில் முதலீடு செய்கின்றன. இதற்கிடையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) விதிமுறைகளின்படி, ஒரு இ.எல்.எஸ்.எஸ் நிதி மொத்த நிதியில் குறைந்தது 80% ஐ ஈக்விட்டியிலும், மீதமுள்ள 20% ஐ மற்ற சொத்துக்களிலும் முதலீடு செய்வது கட்டாயமாகும்.

இந்த நிலையில், வரிச் சலுகைகளுடன் கணிசமான வருமானத்தையும் தரும் திறன் காரணமாக, இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட கால முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமான முதலீட்டு திட்டமாக உள்ளன.
மேலும், இந்தப் ஃபண்ட்கள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி இன் கீழ், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்கள் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்குகளை அனுமதிக்கின்றன.

அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் இங்குள்ளன.

மியூச்சுவல் ஃபண்ட் 10 ஆண்டு வருவாய் (%)
குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்ட்
20.88
பேங்க் ஆஃப் இந்தியா வரி சேமிப்பு ஃபண்ட்
17.55
ஜே.எம். இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்ட்
17.01
டி.எஸ்.பி இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்ட்
16.72
பந்தன் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்ட்16.17

வருமான வரிச் சலுகை

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் திட்டத்தில் ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்வது வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80சி இன் கீழ் வரிச் சலுகைகளுக்குத் தகுதியானது ஆகும்.
இதில், ஒரு நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் வரையிலான எல்.டி.சி.ஜி-க்கு வரி இல்லை, ஆனால் இதற்கு மேல் கிடைக்கும் லாபத்திற்கு 12.5% ​எல்.டி.சி.ஜி வரி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பு துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை ஆகும். முதலீட்டு முன்பு செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தை முதலீட்டு நிபுணரிடம் ஆலோசனைகள் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

இதையும் படிங்க

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அஸ்ஸாம்.. தேர்தல், வாக்கு எண்ணிக்கை.. முழு விவரம்! Assembly Election 2026

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அஸ்ஸாம்.. தேர்தல், வாக்கு எண்ணிக்கை.. முழு விவரம்!

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும்.. இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்கும் திமுக.. மு.க ஸ்டாலின் பரபரப்பு பேச்சு! MK Stalin

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும்.. இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்கும் திமுக.. மு.க ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com