Post office small savings Scheme | PPF | நீங்கள் தினமும் ₹.250 முதலீடு செய்தால் அது 15 ஆண்டுகளில் ₹.24,40,926 ஆக வளரும்.
February 6, 2025
Post office small savings Scheme | PPF | நீங்கள் தினமும் ₹.250 முதலீடு செய்தால் அது 15 ஆண்டுகளில் ₹.24,40,926 ஆக வளரும்.
Published on: September 24, 2024 at 11:40 am
Updated on: September 24, 2024 at 11:43 am
Post office small savings Scheme | PPF | அஞ்சலகத்தின் பி.பி.எஃப் முதலீடு கணக்கை ஒருவர் ரூ.500 செலுத்தி தொடங்க முடியும். இந்தத் திட்டத்தில் ஒருவர் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்துக் கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் வரி சேமிப்பு பலன்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்தத் திட்டம் வங்கிகளிலும் உள்ளது. பிபிஎஃப் 7.1 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ₹.500 முதல் அதிகபட்சம் ₹.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
ரூ.25 லட்சம் சேமிப்பது எப்படி?
பி.பி.எஃப் திட்டத்தில், நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு நாளும் சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலம் பெரிய தொகையைச் சேமிக்கலாம். அதாவது, ஒவ்வொரு மாதமும் ₹.7500 முதலீடு செய்ய வேண்டும் என்றால், தினமும் ₹.250 சேமிக்க வேண்டும். இதன்படி, பிபிஎஃப் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.90,000 முதலீடு செய்வீர்கள். பி.பி.எஃப் என்பது 15 வருட திட்டமாகும்.
அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பி.பி.எஃப் கால்குலேட்டரின் படி கணக்கிட்டால், ₹.90,000 ரூபாய் என்ற விகிதத்தில், 15 ஆண்டுகளில் மொத்தம் ₹.13,50,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதற்கு, 7.1 சதவீத வட்டியில் 10,90,926 ரூபாயும், 15 ஆண்டுகளில் ₹.24,40,926 ரூபாயும் பெறுவீர்கள். மேலும், பி.பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இதில் கடன் வசதி கிடைக்கும். பி.பி.எஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் நீங்கள் கடன் பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.3 லட்சம் வரை ரிட்டன்; ஒரே ஆண்டில் நீங்க லட்சாதிபதி: இந்த மியூச்சவல் ஃபண்டை பாருங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com