Airtel Fixed Deposit | முதலீட்டாளர்களுக்கு 9.1 சதவீதம் வரை வட்டி வழங்கும் வகையில் ஃபிக்சட் டெபாசிட் ஒன்றை ஏர்டெல் பைனான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
Airtel Fixed Deposit | முதலீட்டாளர்களுக்கு 9.1 சதவீதம் வரை வட்டி வழங்கும் வகையில் ஃபிக்சட் டெபாசிட் ஒன்றை ஏர்டெல் பைனான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on: September 13, 2024 at 8:22 am
Updated on: September 13, 2024 at 8:27 am
Airtel Fixed Deposit | பார்தி ஏர்டெல் அதன் டிஜிட்டல் பிரிவான ஏர்டெல் ஃபைனான்ஸ் மூலம் வங்கிகள் மற்றும் பல என்பிஎஃப்சி-களை முறியடிக்கும் வகையில் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுக்கபடுத்தியுள்ளது. இத்திட்டத்தில் அதன் நிலையான வைப்புத்தொகையில் ஆண்டுக்கு 9.1% வரை வட்டி வழங்குகிறது.
இந்த புதிய தளத்தில், வாடிக்கையாளர்கள் ரூ. 1,000 முதலீட்டு செய்து புதிய வங்கிக் கணக்கைத் திறக்காமல் நேரடியாகவே ஃபிக்ஸ்ட் டெபாசிட்களை முன்பதிவு செய்து நிர்வகிக்க முடியும்.
“ஏர்டெல் ஃபைனான்ஸ் ஆனது உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, சிவாலிக் வங்கி, சூர்யோதய ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் ஷிரீராம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பல சிறிய நிதி வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சி களுடன் இணைந்து ஃபிக்ஸ்ட் டெபாசிட் சேவையை வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
தற்போது, ஏர்டெல் ஃபைனான்ஸ் பலவிதமான புதிய திட்டங்களை வழங்குகிறது. அதில் ஏர்டெல் ஃப்ளெக்சி கிரெடிட் தனிப்பட்ட கடன், கூட்டுத்தொகுதி கிரெடிட் அட்டைகள், கூட்டுத்தொகுதி இன்ஸ்டா ஈஎம்ஐ அட்டை மற்றும் தங்கக் கடன்கள் போன்றவை அடங்கும்.
வணிகக் கடன்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட கடன்கள் வழங்குதல் போன்ற கூடுதல் திட்டங்களை இனி வரும் காலங்களில் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8% மேல் வட்டி: இந்த நிதி நிறுவனங்களை பாருங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com