ஆசிய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சீனாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.
ஆசிய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சீனாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.
Published on: November 21, 2024 at 10:14 am
Womens Asian Champions Trophy 2024 | இந்தியா மற்றும் ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, தென் கொரியா, சீனா, ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் 8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் ராஜ்கிர் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 9-வது இடத்திலும் உள்ள இந்தியா, தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 31 வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த 5வது பெனால்ட் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முன்கள வீராங்கனை தீபிகா கோலடித்தார். அதன் பிறகு இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் மற்றும் இன்னொரு பெனால்டி கார்னர் வாய்ப்பை சீன கோல் கீப்பர் லி டிங் தடுத்து விட்டார்.
தொடர்ந்து பதில் கோல் அடிக்க எவ்வளவோ முயன்றும் இந்திய அணியின் அபார ஆட்டத்தால் அவர்களை தடுத்து நிறுத்தினர். முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.
பரிசுத்தொகை அறிவிப்பு
இந்திய ஹாக்கி கூட்டமைப்பு பட்டம் வென்ற இந்திய அணியினருக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சமும், பயிற்சியாளர் உள்பட அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.1½ லட்சமும் அறிவித்துள்ளது.
மேலும் பீகார் அரசும் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. வீராங்கனைகளுக்கு தலா ரூ. 10 லட்சமும், தலைமை பயிற்சியாளருக்கு ரூ.10 லட்சம் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க அதிரடி ஆட்டம் ; கோலி சாதனையை முறியடித்த திலக் ; என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com