Kallakurichi Case | கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நாட்டையை உலுக்கின. இந்த சாராயம் குடித்தவர்களில் 193 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 67 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி பா.ஜ.க மற்றும் பா.ம.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் டி. கிருஷ்ண குமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (நவ.20, 2024, புதன்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு இரு முறை தொடர்ச்சியாக கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்தன. இதனை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டின. பதிலுக்கு பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் நிகழ்ந்த கள்ளச் சாராய மரணங்களை தி.மு.க. சுட்டிக் காட்டியது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க இண்டிகோ கொடுத்த இனிப்பான அறிவிப்பு; டிசம்பர் 21 முதல் மலேசியாவுக்கு நேரடி விமான சேவை!
Vaiko: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வைகோ திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்….
MK Stalin: “ஒவ்வொரு மாணவ மாணவியரும் கல்வியை இறுக பற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு தந்தையைப் போல்…
Sivaganga Lockup Death: சிவகங்கையில் காவல் நிலையத்தில் இளைஞர் மரணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்