Health | குடல் புழுக்கள் முற்றிலுமாக நீங்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன தெரியுமா?
Health | குடல் புழுக்கள் முற்றிலுமாக நீங்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன தெரியுமா?
Published on: November 20, 2024 at 10:01 am
Updated on: November 20, 2024 at 10:17 am
Health | குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் உட்பட குடல் புழுக்கள் பிரச்சனையால் அவதிப்படுவது உண்டு. குடல் புழுக்கள் நீங்குவதற்கான மாத்திரைகள் எடுத்த பின்னரும் புழுக்கள் மீண்டும் உற்பத்தியாகி பிரச்சனை ஏற்படுத்தலாம். இந்தப் பிரச்சனையை இயற்கை முறையில் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை குறித்து சித்த மருத்துவர் டாக்டர் ஜெயரூபா கூறிய வழிமுறைகளை பார்க்கலாம்.
குடல் புழு பிரச்சனையின் அறிகுறிகள்
குடல் புழு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் உணவினை சரிவர உண்ண மாட்டார்கள். இவர்களுக்கு உணவு மீது ஒரு வெறுப்பு தோன்றும். முகத்தில் வெள்ளை நிறத்தில் தேம்பல் ஏற்படும். மேலும் இரவில் தூங்கும் போது பல் கடிக்கும் பழக்கம் இருக்கும். சில குழந்தைகள் இரவில் தூங்கும் பொழுது யூரின் போகவும் இது ஒரு காரணமாக உள்ளது. அலர்ஜி மற்றும் வீசிங் ஏற்படுவதற்கும் கூட குடற்புழுக்கள் முக்கிய காரணமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பூசணி விதை
குடல் புழு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தியின் விதைகளை சாப்பிட கொடுக்கலாம். பூசணி விதையில் உள்ள குக்கர்பீட்டின் என்ற ஆல்கலாய்டு குடற்புழுக்கள் உருவாகும் நிலையிலே அளிக்கக்கூடிய வல்லபம் உடையது. எனவே பூசணி விதையில் செய்யக்கூடிய லட்டு அல்லது பானம் சாப்பிட கொடுக்கும் பொழுது குடல் புழுக்களை அளிக்க முடியும்.
வேப்பம் கொழுந்து மற்றும் ஓமம்
வேப்பம் கொழுந்து மற்றும் ஓமம் இரண்டையும் நன்கு அரைத்து சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதை காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும். நான்காவது நாள் சாப்பிடக்கூடிய விளக்கெண்ணையில் அரை டீ ஸ்பூன் கொடுக்கும் பொழுது குடலில் உள்ள புழுக்கள் அனைத்தும் முழுமையாக வெளியேறிவிடும். மீண்டும் புழுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதற்கு 16 நாட்கள் கழித்த பிறகு மீண்டும் இதே மருந்து முறையை பின்பற்ற வேண்டும். மேலும் வீட்டில் உள்ள அனைவருமே குடல் புழுக்கான மருந்து எடுக்க வேண்டும்.
கை கழுவுதல்
எவ்வளவு மருந்து எடுத்தாலும் குணமாகாமல் மீண்டும் மீண்டும் குடல் புழுக்கள் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டால் முறையாக கை கழுவாமல் இருப்பதும் ஒரு காரணமாகும். குடல் புழுக்கள் மலத்தின் மூலம் பரவக்கூடியது. வீட்டில் ஒருவருக்கு இருந்தாலும் இது மீண்டும் மீண்டும் அனைவருக்கும் வந்து கொண்டே இருக்கும். எனவே சோப்பு அல்லது லிக்யூட் ஹேண்ட் வாஷ் பயன்படுத்தி நன்கு கை கழுவ வேண்டும்.
இதையும் படிங்க : உடல் எடை, மன அழுத்தம் குறையும்; தினந்தோறும் குட்டி நடை: இத்தனை பலன்களா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com