காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா? டிடிவி தினகரன்!

காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Published on: November 15, 2024 at 5:21 pm

TTV Dhinakaran | விளிம்பு நிலை மக்களின் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் தடைபோடும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா ? – விளிம்பு நிலை மக்களின் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் தடைபோடும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தங்கள் குழந்தைகளுடன் 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் இயங்கிவரும் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த சாதி சான்றிதழ் நடப்பாண்டில் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்டுநாயக்கர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதோடு, அனைத்து சமுதாயத்தினருக்கும் வழங்கப்படுவதை போல இவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டுமா ;சிறப்பு முகாம்கள் அறிவிப்பு ; இந்த நாட்களை நோட் பண்ணுங்க!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா? டிடிவி தினகரன்!
TTV Dinakaran

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா? டிடிவி தினகரன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com