Delhi | டெல்லியில் வழக்கத்துக்கு மாறாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.
Delhi | டெல்லியில் வழக்கத்துக்கு மாறாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.
Published on: November 15, 2024 at 7:14 am
Delhi | தேசிய தலைநகர் டெல்லியில் வழக்கத்துக்கு மாறாக காற்றின் தரம் குறைந்து காணப்படுகிறது. வானமும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் இந்த வெள்ளை புகையை காண முடிகிறது. இதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், காற்றின் மாசை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவர்கள், காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆன்லைனில் வகுப்புகள் தொடரலாம் என கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ” மறு அறிவிப்பு வரும் வரை டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மூடப்படும்; ஆன்லைனில் வகுப்புகள் தொடரும்” என தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று மாசுக்கு தீபாவளி பட்டாசு காரணம் எனக் கூறப்பட்டாலும், தீபாவளி முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில் இன்னமும் எப்படி வானம் புகை மூட்டத்துடன் காணப்படும்? காற்றின் மாசுக்கு உண்மையான பின்னணியை கண்டுபிடிக்க வேண்டும். தொடர்ந்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : டெல்லியில் கடும் மாசு; என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com