லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 32 பேர் பலி

Israeli airstrikes across lebanon | லெபனானில் இஸ்ரேல் நடத்திய வெவ்வேறு வான்வழி தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

Published on: November 13, 2024 at 5:16 pm

Israeli airstrikes across lebanon | லெபனானில் இஸ்ரேல் நடத்திய வெவ்வேறு வான்வழி தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஓராண்டாக நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மோதல் நடைபெற்று வரும் நிலையில், மவுண்ட் லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். பால்ச்மே நகரில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், தெற்கு டெபாஹ்தா பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். டயர் மாவட்டத்தில் உள்ள மன்சூரி கிராமத்தில் நடந்த தாக்குதலில் ஒரு துணை டாக்டர் கொல்லப்பட்டார்.

அதேபோல, ஹெர்மலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர், மற்றொருவர் டயர் அருகிலுள்ள புர்ஜ் எல்-ஷெமாலியில் கொல்லப்பட்டார். மேலும் ரூமின் கிராமத்தில் இரண்டு பேரும், மற்றொரு தாக்குதலில் 2 பேரும் கொல்லப்பட்டதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மணிப்பூரில் துப்பாக்கிசூடு :11 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?..அன்புமணி கண்டனம்
Anbumani Ramadoss

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?..அன்புமணி கண்டனம்

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது எப்படி?
Ayatollah Ali Khamenei killing

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com