M K Stalin | தமிழ்நாட்டில் 2026ல் மீண்டும் தி.மு.க ஆட்சிதான் என மு.க. ஸ்டாலின் உறுதியாக கூறினார்.
M K Stalin | தமிழ்நாட்டில் 2026ல் மீண்டும் தி.மு.க ஆட்சிதான் என மு.க. ஸ்டாலின் உறுதியாக கூறினார்.
Published on: November 5, 2024 at 11:48 pm
M K Stalin | தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள்கள் பயணமாக கோவை சென்றுள்ளார். அவர் அங்கு போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். அந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். குறிப்பாக, தங்க நகை தொழில் பூங்கா அமைக்க பரிசீலிக்கப்படும்” என்றார்.
முன்னதாக, “எந்த எதிர்பார்ப்பும் இன்றி திமுகவுக்காக உழைக்கும் தொண்டர்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதிகளில் கொள்கை வீரர்களாக 10 அல்லது 15 பேரை உருவாக்க வேண்டியது நமது கடமை” என கட்சி நிர்வாகிகளிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் பேட்டியின்போது மு.க. ஸ்டாலின், “2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும். இதனை மக்களின் வரவேற்பு மூலமாக தெரிந்துக் கொண்டேன்” என்றார்.
இதையும் படிங்க ‘வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக் கூடாது’: சீமானுக்கு பிரேமலதா அறிவுரை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com