Jharkhand | ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தேர்தல் வேட்பு மனுவில் வயது தொடர்பாக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியுள்ளது.
Jharkhand | ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தேர்தல் வேட்பு மனுவில் வயது தொடர்பாக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியுள்ளது.
Published on: November 1, 2024 at 5:35 pm
Updated on: November 1, 2024 at 5:36 pm
Jharkhand | ஜார்கண்ட் மாநிலம் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் வயது தொடர்பான முரண்பாடுகள் இருப்பதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியுள்ளது.
அதாவது முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வயது கடந்த 5 ஆண்டுகளில் 7 வயது வரை அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, 2019 தேர்தல் பிரமாண பத்திரத்தில் சோரன் 42 வயது என குறிப்பிட்டுள்ளார். தற்போது, 47க்கு பதிலாக 49 வயது என பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது சர்ச்சையாக வெடித்துள்ளது. ஹேமந்த் சோரன் வயது மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி (BJP) சோரனின் வேட்புமனுவை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதியோ, “ஐந்து ஆண்டுகளில் ஒருவரின் வயது ஏழு ஆண்டுகள் எப்படி அதிகரிக்க முடியும்? மேலும், சோரனின் வருமானம் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக குறைந்துள்ளது. பல சொத்துக்கள் பிரமாணப் பத்திரத்தில் வெளியிடப்படவில்லை” என்றார்.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க புகார் அளித்துள்ளது.
இதையும் படிங்க : பரபரக்கும் மகாராஷ்டிரா; மகனை களமிறக்கிய ராஜ் தாக்கரே: பா.ஜ.க, ஷிண்டே நிலைப்பாடு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com