Amaran First day Collection | தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
Amaran First day Collection | தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
Published on: November 1, 2024 at 2:05 pm
Updated on: November 1, 2024 at 7:21 pm
Amaran First day Collection | ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளிக்கு(நேற்று) வெளியான படம் ‘அமரன்’. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அமரன் படம் நேற்று மட்டும் உலகம் முழுவதும் ரூ.21 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழ் நாட்டில் மட்டும் ரூ.15 கோடி வசூலித்துள்ளது. சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ படம் முதல் நாளில் ரூ.13 கோடி வசூலித்தது.
இந்த ஆண்டு இதுவரை, விஜய்யின் ‘தி கோட்’ மற்றும் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படங்கள் மட்டுமே நல்ல தொடக்கத்தை பெற்றிருந்தநிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்து சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது.
அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு
இதற்கிடையில் இன்று (நவ.1, 2024) அமரன் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவகரங்கள் வெளியாகின. அதில், ரூ.42.3 கோடியை வசூலித்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமரன் படத்தின் அதிரடி வசூல், இந்த வார இறுதியில் ரூ.120 கோடியைத் தாண்டும் என்றும் சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர். படத்தில் சிவ கார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பு பெரும் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com