Kerala Prabha award | இஸ்ரோ தலைமை விஞ்ஞானி சோம்நாத்துக்கு கேரள அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Kerala Prabha award | இஸ்ரோ தலைமை விஞ்ஞானி சோம்நாத்துக்கு கேரள அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: November 1, 2024 at 9:55 am
Kerala Prabha award | பிரபல எழுத்தாளர் எம்.கே.சானு, இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் மற்றும் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட 8 பேருக்கு கேரள மாநில அரசின் உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சானு இலக்கியத்திற்கான அவரது பங்களிப்பிற்காக கேரள ஜோதியைப் பெறுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சோம்நாத் மற்றும் புவனேஷ்வரி முறையே அறிவியல், பொறியியல் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் சாதனை படைத்ததற்காக கேரள பிரபா விருதுடன் கௌரவிக்கப்படுவார்கள் என்று மாநில அரசு வெளியீடு தெரிவித்துள்ளது.
கேரள ஸ்ரீ விருதுகள்
மாநிலத்தின் உயரிய விருதான கேரள ஜோதி ஆண்டுதோறும் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது மிக உயர்ந்த விருது, கேரளா பிரபா, இரண்டு நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் மூன்றாவது உயரிய விருதான கேரள ஸ்ரீ 5 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் பல்வேறு துறைகளில் அவர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வயநாடு மறு சீரமைப்பு பணிகள்; நிதி வழங்காத மோடி அரசு: பிரியங்கா பரப்புரை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com