West Bengal | மேற்கு வங்கத்தின் வடக்கு டம் டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தன்மோய் பட்டாச்சார்யாவை, அவரின் இல்லத்தில் நேர்காணல் செய்த பிரபல பெண் பத்திரிக்கையாளர் அவர் மீது சில அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர், பட்டாச்சார்யா தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பட்டாச்சார்யா மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைமையை குறித்தும், அவர்கள் இதுவரை எதற்கும் பதிலளிக்காததற்கான காரணங்களைப் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகம் பட்டாச்சார்யாவைசஸ்பெண்ட் செய்ததோடு விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய, மாநில செயலாளர் சலீம், “இந்த மாதிரியான செயல்களுக்கு கட்சி இடமளிக்காது. பட்டாச்சார்யா தனது இன்டர்வ்யூக்களை வீட்டில் நடத்துவதன் காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்கடெல்லியில் அதிர்ச்சி; கட்டடத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை: ஷாக்கிங் வீடியோ!
West Bengal | டியூசன் சென்று திரும்பிய மாணவி பிணமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பெரும் போராட்டம் வெடித்துள்ளது….
POCSO Act | 7 வயது சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் இளைஞருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது….
West bengal MP Nurul Islam | திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஹாஜி ஷேக் நூருல் இஸ்லாம் இன்று (செப்.25, 2024) அவரது வீட்டில் காலமானார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்