Diwali Special Buses | தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Diwali Special Buses | தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Published on: October 28, 2024 at 12:21 pm
Diwali Special Buses | தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பெருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து 4 ஆயிரத்து 900 சிறப்பு பேருந்துகளும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2 ஆயிரத்து 910 சிறப்பு பேருந்துகளும் இயக்க போக்குவரத்து துறைநடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இன்று வழக்கமான பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 700 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 பேருந்துகளும், இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 3 நாட்களுக்கு 14 ஆயிரத்து 086 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பேருந்துகள் வாயிலாக 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருத்தில் பயணம் செய்பவர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி எண்கள்: 7845700557, 7845727920, 7845740924.
புகார் தெரிவிப்பதற்கான எண்கள்
அரசு பேருந்துகள்: 94450 14436
ஆம்னி பேருந்துகள்: 044-24749002, 26280445, 26281611.
இதையும் படிங்க விஜய் முதல் அரசியல் மாநாடு; உதயநிதி கொடுத்த ரீப்ளே: என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com