UP bypolls | உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியில்லை என அறிவித்துள்ளது.
UP bypolls | உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியில்லை என அறிவித்துள்ளது.
Published on: October 24, 2024 at 4:05 pm
UP bypolls | உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு (எஸ்பி) ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. கர்ஹால், சிசாமாவ், புல்பூர், மில்கிபூர், கடேஹரி, மஜஹவான் மற்றும் மீராபூர் ஆகிய இடங்களிலிருந்து சமாஜ்வாதி கட்சி தனது வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து விட்டது.
முன்னதாக, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘இந்தியக் கூட்டணி’யின் கூட்டு வேட்பாளர்கள், சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் சின்னமான ‘சைக்கிளில்’ 9 தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள் என்றார்.
மேலும் ட்விட்டர் எக்ஸ் பதிவில், காங்கிரஸும் சமாஜ்வாடியும் ஒன்றிணைந்திருப்பதாகவும், ஒரு பெரிய வெற்றிக்காக தோளோடு தோள் நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இடைத்தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றியின் புதிய அத்தியாயத்தை எழுதப் போகிறது என்றும் அவர் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் ஒன்பது தொகுதிகளில் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்தத் தொகுதிகள் கடேஹாரி (அம்பேத்கர் நகர்), கர்ஹால் (மெயின்புரி), மீராபூர் (முசாபர்நகர்), காசியாபாத், மஜவான் (மிர்சாபூர்), சிஷாமாவ் (கான்பூர் நகரம்), கைர் (அலிகார்), புல்பூர் ( பிரயாக்ராஜ்), மற்றும் குந்தர்கி (மொராதாபாத்) என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மராட்டியத்தில் 170 தொகுதிகள்.. அடுத்து இவர் ஆட்சிதான்: ராம்தாஸ் அத்வாலே பரபரப்பு கருத்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com