தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு; அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

RMC Chennai | தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (அக்.19, 2024) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: October 19, 2024 at 8:59 am

RMC Chennai | “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-

19.10.2024:

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.10.2024:

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21.10.2024

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.10.2024

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23.10.2024

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24.10.2024

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

20.10.2024: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.10.2024: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22.10.2024: அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

19.10.2024

கர்நாடக கடலோரப்பகுதிகள், மத்தியகிழக்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.10.2024:

கர்நாடக கடலோரப்பகுதிகள், மத்தியகிழக்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.10,2024

மத்தியகிழக்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22.10.2024: எச்சரிக்கை ஏதுமில்லை.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க லாபம் கொட்டும்; பயணங்கள் கூடும்: இன்றைய ராசிபலன் (அக்.19, 2024)

திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. முழு விவரம்! Special Train Services

திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. முழு விவரம்!

Special Train Services: திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை காலம் நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது….

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை.. அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்! Sri Lanka Releases TN Fishermen

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை.. அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்!

Sri Lanka Releases TN Fishermen : இலங்கையில் வாடிய தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு அந்நாட்டு பண மதிப்பில் ரூ.50 ஆயிரம்…

“நான் அரசியலுக்கு வந்தது விபத்து”.. கே.என்.நேரு விமர்சனத்துக்கு துரை வைகோ பதிலடி! Durai Vaiko vs KN Nehru

“நான் அரசியலுக்கு வந்தது விபத்து”.. கே.என்.நேரு விமர்சனத்துக்கு துரை வைகோ பதிலடி!

Durai Vaiko vs KN Nehru : நான் அரசியலுக்கு வந்தது விபத்து என கே.என்.நேரு விமர்சனத்துக்கு துரை வைகோ பதிலளித்துள்ளார்….

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு.. எண்ணிக்கை 3,096 ஆக உயர்வு! Dengue Cases Rise

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு.. எண்ணிக்கை 3,096 ஆக

Dengue Cases Rise : தமிழ்நாட்டில் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு. ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,096 ஆக அதிகரித்துள்ளது….

ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரம்: திமுக பிரமுகர் மீது FIR.. பரபரப்பு தகவல்கள்! Srirangam Temple land case

ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரம்: திமுக பிரமுகர் மீது FIR.. பரபரப்பு தகவல்கள்!

Srirangam Temple land case : ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரத்தில், திமுக பிரமுகர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள்…

தனியார் பள்ளிகள் அனுமதிக்கு லஞ்சம்? அன்பில் மகேஷிடம் கேட்கப்பட்ட 246 கேள்விகள்! Anbil Mahesh on CCB Inquiry

தனியார் பள்ளிகள் அனுமதிக்கு லஞ்சம்? அன்பில் மகேஷிடம் கேட்கப்பட்ட 246 கேள்விகள்!

Anbil Mahesh on CCB Inquiry : அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடம் 246 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com