Public Exam Time Table | 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
February 6, 2025
Public Exam Time Table | 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
Published on: October 14, 2024 at 1:35 pm
Public Exam Time Table | கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகக்த்தில் வைத்து 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம். பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 12 ஆம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பிற்கு பிப். 15 ஆம் தேதி துவங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும். 10 ஆம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வு பிப். 22 ஆம் தேதி துவங்கி பிப். 28 ஆம் தேதி வரை நடைபெறும்.
எழுத்துத் தேர்வு 12 ஆம் வகுப்பிற்கு மார்ச் 3 ஆம் தேதி துவங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பிற்கு மார்ச் 5 ஆம் தேதி துவங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறும். 10 ஆம் வகுப்பிற்கு மார்ச் 28 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும்.
தேர்வு முடிவுகள் 12 ஆம் வகுப்பிற்கு மே மாதம் 9 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பிற்கு மே 19 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பிற்கு மே 19 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்..வாக்குறுதியை நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com