Passenger train accident in Chennai | சென்னையில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் காயமுற்றனர்.
Passenger train accident in Chennai | சென்னையில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் காயமுற்றனர்.
Published on: October 12, 2024 at 1:12 pm
Passenger train accident in Chennai | சென்னை கோட்டத்தில் உள்ள கவரைப்பேட்டையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 12578 மைசூரு-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. ரயில் மெயின் லைனுக்குப் பதிலாக ஒரு லூப் லைனில் நுழைந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன.
மேலும், 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டது. இதுகுறித்து தெரிவித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் ரயிலில் 1,360 பயணிகள் இருந்ததாக தெரிவித்தார். மேலும், பயணிகளில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார். இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
நள்ளிரவுக்குப் பிறகு, அங்கு சிக்கித் தவித்த பயணிகள் எம்டிசி பேருந்துகள் மூலம் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதிகாலையில், அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம், சிக்கித் தவித்த பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (சிஆர்எஸ்) அனந்த் மதுகர் சவுத்ரி விபத்து நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டார். விபத்து காரணமாக 18அ ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) October 11, 2024
தகவல் கிடைக்கப்பெற்றவுடன், மாண்புமிகு அமைச்சர் @Avadi_Nasar அவர்களையும் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன்.
மீட்பு மற்றும்…
அதிகாரிகள் அளித்த தகவலின்படி, மறுசீரமைப்பு நிறைவடைய 24 மணி நேரம் ஆகலாம். அதாவது, சனிக்கிழமை மாலைக்குள் இந்த பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com