Pooja reunited with Vijay again | தெலுங்கு, இந்தி, தமிழ் என சினிமாவில் ஒரு ரவுண்ட் வரும் பூஜா ஹெக்டே மராட்டியத்தை சேர்ந்தவர். இவர், 2012ஆம் ஆண்டு முகமூடி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.
தெலுங்கில் 2014 ஆண்டு ஒக லைலா கோஷம் என்ற படத்தில் அறிமுகமானார். இது இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதன்பின்னர் தெலுங்கில் தொடர்ந்து நடித்தார்.
தெலுங்கில் அல வைகுந்தபுரமலு, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் கவனம் பெற்றார். இந்தப் படங்களுக்காக இவருக்கு விருதும் கிடைத்தது.
மராட்டிய தலைநகர் மும்பையில் பிறந்தாலும் பூஜாவின் தாய் மொழி துலு ஆகும். பந்த் குடும்ப பின்னணியை கொண்ட இவர்கள் கர்நாடக மாநிலம் உடுப்பியை பூர்விகமாக கொண்டவர்கள் ஆவார்கள்.
பூஜா 2009ஆம் ஆண்டு இந்திய அழகி போட்டியில் கலந்துகொண்டு ரன்னர்அப் ஆக வந்தார். அதன்பின்னர், சினிமாவில் தோன்றினார். இவரை தமிழ் சினிமாவில் மிஸ்கின் அறிமுகப்படுத்தினார்.
தெலுங்கு, இந்தியில் கவனம் செலுத்திவந்த பூஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய் உடன் பீஸ்ட் என்ற படத்தில் நடித்தார்.
Karakattakaran actress kanaga: தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா. இவர், ரஜினிகாந்த், மறைந்த விஜயகாந்த், சரத்குமார்,…
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.