West Bengal | மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இன்று (அக்.5, 2024) 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், உள்ளூர் மக்கள் காவல் நிலையத்தை சூறையாடினர். வெள்ளிக்கிழமை மாலை முதல் சிறுமி காணாமல் போயுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் போலீசார் “உடனடியாக அவர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை ஜெய்நகர் பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர், “உள்ளூர் மக்கள் புறக்காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களையும் சேதப்படுத்தினர். மேலும் போலீசார் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், “பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அப்பகுதியில் உள்ள மகிஸ்மரி அவுட்போஸ்டில் எஃப்ஐஆர் பதிவு செய்தனர், ஆனால் போலீசார் உடனடியாக புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், “சிறுமி கொலைக்கு எதிராக பா.ஜ.க.வினர் நீதி கோரி பேரணி நடத்தினார்கள். மேலும், சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மம்தா பானர்ஜி குற்றவாளிகளை பாதுகாக்கிறார். இந்த வழக்கில் துரித விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க
Actor Krishna arrested: போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் நடிகர் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டார்….
Alankulam: திருநெல்வேலியை அடுத்த ஆலங்குளத்தில் பெண்ணை அவரது கணவர் அவரது கணவர் வெட்டி படுகொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்….
Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்….
Man arrested for snatching chain: திசையன்விளையில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்த திருடன் போலீசாரால் விரைந்து கைது செய்யப்பட்டார்….
Bihar : பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்திய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்