Jaishankar Pakistan Visit | இந்திய வெளியறவு அமைச்சர் ஜெய் சங்கர் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
Jaishankar Pakistan Visit | இந்திய வெளியறவு அமைச்சர் ஜெய் சங்கர் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
Published on: October 4, 2024 at 11:34 pm
Jaishankar Pakistan Visit | இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், அக்டோபர் 15-16 தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இதற்காக பாகிஸ்தான் செல்லும் இந்தியக் குழுவை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வழிநடத்துவார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO CHG) சுழற்சித் தலைவர் பதவியை வகிக்கும் பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஷாங்காய் உறுப்பு நாடுகளின் அனைத்து அரசாங்கத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து இருந்தது.
மேலும், 9 ஆண்டுகளுக்கு பின்னர், வெளியுறவு அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, 2015ஆம் ஆண்டு டிசம்பர் 8-9, ஆகிய தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் தொடர்பான ஆசியாவின் மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com