Actor Jayam Ravi | நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி ஜோடிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை பிரியப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக விவாகரத்து நோட்டீஸூம் அனுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த ஆர்த்தி, ஜெயம் ரவியிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் அவருக்காக காத்திருப்பேன்.
பொதுவெளியில் உலாவும் ஊடகங்களுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை” எனத் தெரிவித்து இருந்தார். ஜெயம் ரவியும் தனது தனியுரிமையை மதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கிடையில் ஜெயம் ரவி மும்பையில் செட்டில் ஆகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன. மேலும், ஆர்த்தி கொடுத்த தொடர் டார்ச்சர் காரணமாக ஜெயம் ரவி பிரிந்து சென்றுவிட்டார் என்றும் சிலர் கூறினர்.
மேலும், ஜெயம் ரவியும் தனக்கு என்று தனி வங்கிக் கணக்கோ, வாட்ஸ்அப் தொடர்போ கிடையாது. என்னை வைத்து படம் எடுத்து நஷ்ட கணக்கை காண்பித்துவிட்டனர்” எனக் கூறி இருந்தார். இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், “ஜெயம் ரவியை வைத்து, அவரது மாமியார் ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளார். அவரை வைத்து 3 படங்கள் எடுத்தார். அதில் சைரன் மட்டும்தான் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்தப் படங்களுக்கெல்லாம் ஜெயம் ரவியின் சம்பளத்துடன் சேர்ந்து ரூ.100 கோடி வரை செலவு வரும்” என்றார்.
இதையும் படிங்க
Dude box office collection: நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் 2ஆம் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன….
Karakattakaran actress kanaga: தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா. இவர், ரஜினிகாந்த், மறைந்த விஜயகாந்த், சரத்குமார்,…
Vikram Prabhu: விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் டானாக்காரன் படத்தை இயக்கிய தமிழின் கதையில் ‘சிறை’ உருவாகியுள்ளது….
Rishab Shetty: காந்தாரா சாப்டர் 1 வசூலில் ரூ.500 கோடியை கடந்துள்ள நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி மும்பை சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினார்….
Actress Trisha Krishnan: பஞ்சாப் தொழிலதிபருடன் நடிகை திரிஷா திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்