PMK Sri Lanka embassy blockade protest | பாமக சார்பில் 8-ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது என அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் போதிலும் அதை சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “சிங்களக் கடற்படையினரின் அண்மைக்கால கொடிய அத்துமீறல்களுக்கு எடுத்துக்காட்டு தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் தான். வங்கக்கடலில் இரு படகுகளில் சென்று ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கடல் நீரோட்டத்தின் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கைக் கடற்படை இரு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, அனைத்து மீனவர்களுக்கும் இலங்கை ரூபாய் மதிப்பில் தலா ரூ.3.5கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தாத வரை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டது.
அபராதத்தை செலுத்த முடியாத மீனவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர்” எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து, “முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி – பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
Anbumani Ramadoss: 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை-படுகொலை, தாயார் படுகொலை வழக்கில் தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மறுஆய்வு மனுவை தாக்கல்…
Diwali Bonous demand: “போக்குவரத்துக் கழகங்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கு 25% தீபஒளி போனசை உடனடியாக அரசு வழங்க வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்….
Anbumani Ramadoss: திருவண்ணாமலையில், இளம்பெண்ணை காவலர்கள் இருவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Anbumani Ramadoss: கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை (செப்.29,2025) வலியுறுத்தியுள்ளார்….
Anbumani Ramadoss: “தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளில் தமிழகத்தில் மதுவிலக்கு, போதை ஒழிப்பு கோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்றுங்கள்” என கோரியுள்ளார் பா.ம.க தலைவர்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்