கல்வி பணியாளர்கள் ஊதியம்: மாநில அரசுக்கு கடமை இல்லையா? மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss | மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை மாற்று ஏற்பாடு செய்யும் கடமை மாநில அரசுக்கு இல்லையா? என மருத்துவர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: October 2, 2024 at 2:22 pm

Dr Ramadoss | தமிழக கல்வி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் ஓர் அங்கமாக திகழும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 15,000 பேர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 17,500 பேர் என மொத்தம் 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை.

இந்தத் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றும் இ.ஆ.ப. அதிகாரி ஆர்த்திக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் செய்யப்படும் தாமதமும், காட்டப்படும் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை. மேலும், ‘ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி வராததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

இப்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாததன் மூலம் பள்ளிக்கல்வித் திட்டத்தின் செயல்பாடுகளே முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பணம் இல்லை என்று பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கினால் கல்வித்துறையில் அதை விட பேரவலம் இருக்க முடியாது.

நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டும் முடிவடைந்து விட்ட நிலையில், மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக அரசும் அந்த நிதிக்காக காத்திருக்காமல் சொந்த நிதியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

மாணவர்கள் மீது தாக்குதல்; டிஜிட்டல் பயிர் சர்வே திட்டத்தைக் கைவிட வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் Dr. Ramadoss has urged that students be freed from digital survey tasks

மாணவர்கள் மீது தாக்குதல்; டிஜிட்டல் பயிர் சர்வே திட்டத்தைக் கைவிட வேண்டும்: மருத்துவர்

Dr Ramadoss | பாதிப்புகளை ஏற்படுத்தும் டிஜிட்டல் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்….

அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை; திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு: மருத்துவர் ராமதாஸ் Dr. Ramadoss said Rs.1000 entitlement for all womens are DMK's fear of defeat is a manifestation

அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை; திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு: மருத்துவர்

Dr Ramadoss | அனைத்து மகளிர்க்கும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளியிட என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்….

சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை; சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? Doctor Ramadoss questioned is this the aim of law and order in Tamil Nadu

சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை; சட்டம்-ஒழுங்கு லட்சனம்

Dr Ramadoss | சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா என மருத்துவர் ராமதாஸ் கேள்வி…

தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படும் நாள் எந்நாளோ? மருத்துவர் ராமதாஸ் Dr Ramadoss asked when the Sri Lankan Navys violation will end

தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு

Dr Ramadoss | தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிங்கள கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுவது எப்போது என பாமக…

5960 ஆசிரியர்களுக்கு பணி ஆணைகளை வழங்குங்கள்: மருத்துவர் ராமதாஸ் Dr. Ramadoss has urged that students be freed from digital survey tasks

5960 ஆசிரியர்களுக்கு பணி ஆணைகளை வழங்குங்கள்: மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss | 5960 ஆசிரியர்களுக்கு பணி ஆணைகளை வழங்குமாறு மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com