நவம்பர் 28, 30-ல் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம்: சில ரயில்கள் ரத்து!

Chennai Train Cancellation: நவம்பர் 28, 30-ல் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Published on: November 28, 2026 at 2:48 pm

சென்னை, நவ.28, 2026: செங்கல்பட்டு ரயில் பணிமனையில் நடைபெற உள்ள பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் நவம்பர் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்காக இரு நாட்களிலும் காலை 11.40 மணி முதல் பிற்பகல் 3.10 மணி வரை தண்டவாளம் மற்றும் மின்சாரத் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.

நவம்பர் 28-ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.13, 10.48 மற்றும் பிற்பகல் 12.30 மணிக்குப் புறப்படும் ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 12.30, 1.05 மற்றும் 3 மணிக்குப் புறப்படும் ரயில்களும் சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

நவம்பர் 30-ஆம் தேதி மொத்தம் 12 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.13, 10.48, 11.28, பிற்பகல் 12.02, 12.30 மற்றும் 1.45 மணிக்குப் புறப்படும் ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து காலை 11.50, பிற்பகல் 12.30, 1.05, 1.35, 2.15 மற்றும் 3 மணிக்குப் புறப்படும் ரயில்களும் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. பெரும்பாலான ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்; இரண்டு ரயில்கள் காட்டாங்குளத்தூர் வரை இயக்கப்படும்.

மேலும், நவம்பர் 30-ஆம் தேதி காலை 11.05 மணிக்கு திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்குப் புறப்படும் ரயிலும், பிற்பகல் 1 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்குப் புறப்படும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தொகுதி மறுவரையறை மசோதாவைத் தோற்கடிக்க திமுக முன்வர வேண்டும்.. தொல். திருமாவளவன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com