பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார்: தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது!

Arul Vignesh Arrest: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.

Published on: November 27, 2026 at 7:17 pm

கள்ளக்குறிச்சி, நவ.27, 2026: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் தனது செல்போனில் இருந்து பெண் ஆட்சியருக்கு அவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், போலீசார் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கும், கண்காணிப்பு அதிகாரியாக காவல்துறை ஐ.ஜி. என். காமினியும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் சாட்சிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதிபதி சுவாதி அழகப்பன் முன்னிலையில் பெண் மாவட்ட ஆட்சியர் ரகசிய வாக்குமூலம் அளித்தார். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, கோட்டாட்சியர் முருகன், வட்டாட்சியர் சேகர் மற்றும் ஆட்சியரின் பாதுகாவலர், உதவியாளர்கள் உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் வீட்டில் இருந்த அருள் விக்னேஷைக் கைது செய்தனர். ஏற்கெனவே இந்தக் குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்திருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் இதுவரை ராஜினாமா செய்யவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க :திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com