Kanchipuram Kumarakottam Murugan Temple : காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் நவ.29-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
Kanchipuram Kumarakottam Murugan Temple : காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் நவ.29-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

Published on: November 27, 2026 at 2:47 pm
சென்னை, நவ.27, 2026: காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி கோவில் முழுவதும் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. தண்டாயுதபாணி சுவாமி சன்னதி மற்றும் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபத்தின் எட்டு தூண்களிலும் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. மூலவர் சன்னதி நுழைவுப் பகுதியும் வெள்ளித் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்கள், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக குமரக்கோட்டம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. யாகசாலை பூஜைகளில் 100 சிவாச்சாரியார்களும், 40 திருமுறை ஓதுவார்களும் பங்கேற்கின்றனர்.
வரும் 29-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக மூலவருக்கு தனி யாகசாலையும், பரிவார மூர்த்திகளுக்கு 20 யாகசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கை.. தமிழக பக்தர் நேர்த்திக்கடன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com