காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Cauvery Gundar Link Project: காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Published on: November 26, 2026 at 2:03 pm

சென்னை, நவ.26, 2026: காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை விவகாரத்தை திசைதிருப்பும் நோக்கத்திலேயே கர்நாடக அரசு இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

காவிரியில் கிடைக்கும் உபரி நீரைக் கொண்டுதான் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. காவிரியின் கடைமடை பாசனப் பகுதியான தமிழகத்திற்கு உபரி நீரைப் பயன்படுத்த உரிமை உள்ளது என்றும், இந்தத் திட்டத்தை எதிர்க்க கர்நாடகத்திற்கு உரிமை இல்லை என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் தமிழக அரசின் சொந்தத் திட்டம் என்றும், இதனை தேசியத் திட்டமாக அறிவிப்பதற்குத்தான் மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தத் தடை விதிக்க முடியாது என மதுரை உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 9-ம் தேதி தீர்ப்பளித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கர்நாடக அரசு தொடர்ந்துள்ள புதிய வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும்போது, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் தமிழக அரசு வாதிட வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்குத் தேவையான ரூ.6,941 கோடியை ஒரே கட்டமாக ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ்!

தேனியில் 3,000 ஆண்டுகள் பழமையான ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு.. பண்டைய வானியல் அறிவுக்கு ஆதாரம்!
Ancient Burial Sites in Theni

தேனியில் 3,000 ஆண்டுகள் பழமையான ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு.. பண்டைய வானியல் அறிவுக்கு ஆதாரம்!

பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்.. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு.. அடுத்து என்ன?
Arul Vignesh Obscene Message Case

பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்.. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு.. அடுத்து

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com