IPL 2027 Mini Auction: ஐ.பி.எல். 2027 மினி ஏலத்திற்காக 14 இந்திய வீரர்கள் தங்களது அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளனர். ஆவேஷ் கான், தீபக் சாஹர் ஆகியோர் அதிகபட்சமாக ரூ.2 கோடியை அடிப்படை விலையாக அறிவித்துள்ளனர்.
IPL 2027 Mini Auction: ஐ.பி.எல். 2027 மினி ஏலத்திற்காக 14 இந்திய வீரர்கள் தங்களது அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளனர். ஆவேஷ் கான், தீபக் சாஹர் ஆகியோர் அதிகபட்சமாக ரூ.2 கோடியை அடிப்படை விலையாக அறிவித்துள்ளனர்.

Published on: November 25, 2026 at 12:37 pm
கோவா, நவ.25, 2026: ஐ.பி.எல். 2027-ம் ஆண்டுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வுப் பணிகளில் 10 அணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த ஏலத்திற்கான ஆரம்ப வீரர்கள் பட்டியலில் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய 14 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் எனப் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் உள்ளனர். குறிப்பாக, ஆவேஷ் கான் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா ரூ.2 கோடியை அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர். ஆகாஷ் தீப், ஜெய்தேவ் உனட்கட், துஷார் தேஷ்பாண்டே, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ரூ.1 கோடியை அடிப்படை விலையாக அறிவித்துள்ளனர்.
மற்ற வீரர்களான தீபக் ஹூடா, கருண் நாயர், குல்தீப் சென், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, சாரன்ஷ் ஜெயின், சிவம் மாவி மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய 8 பேரும் தலா ரூ.75 லட்சத்தை அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர். இதன் மூலம் 14 இந்திய வீரர்களின் அடிப்படை விலை விவரங்கள் வெளியாகியுள்ளன.
அனுபவம் வாய்ந்த வீரர்களான ஆவேஷ் கான், தீபக் சாஹர், உமேஷ் யாதவ் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரை எந்தெந்த அணிகள் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள மினி ஏலத்தில் இந்த வீரர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிராஜ் எனது நண்பர்; அவரை அணியில் இருந்து நீக்கியது கடினமான முடிவு.. சுப்மன் கில்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com