Dhanush D56 Madurai Shooting: நடிகர் தனுஷின் ‘D56’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கிய நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Dhanush D56 Madurai Shooting: நடிகர் தனுஷின் ‘D56’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கிய நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Published on: November 24, 2026 at 1:46 pm
மதுரை, நவ.24, 2026: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அவரது 56-வது திரைப்படமான ‘D56’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற உள்ள இந்தப் படப்பிடிப்பில் அதிரடி சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதற்காக நடிகர்கள் தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா மதுரைக்கு வந்துள்ளனர். விமான நிலையத்தில் ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பிரைமார்க் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
முன்னதாக, சிவகங்கை மாவட்டம் மாரநாடு கருப்பணசாமி கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது மதுரையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், இப்படம் 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 7 ஆண்டுகளை நிறைவு செய்த ‘ஆதித்ய வர்மா’ – பழைய நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ந்த நடிகர் விக்ரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com