7 ஆண்டுகளை நிறைவு செய்த ‘ஆதித்ய வர்மா’ – பழைய நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ந்த நடிகர் விக்ரம்!

Adithya Varma 7th Anniversary: நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Published on: November 24, 2026 at 1:04 pm

சென்னை, நவ.24, 2026: நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி நடிகர் விக்ரம் தனது மகனுடனான படப்பிடிப்பு நினைவுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட திரைக்குப் பின்னால் உள்ள புகைப்படங்களைப் பகிர்ந்த விக்ரம், “ஒரு அப்பா, ஒரு மகன், அவனது முதல் படம். கேமராவுக்குப் பின்னால் இருந்த மறக்க முடியாத நாட்கள். ஆதித்ய வர்மா படத்தின் 7 ஆண்டுகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கிரிசய்யா இயக்கிய இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனிதா சந்து நடித்திருந்தார். பிரியா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் இசையை ரதன் அமைத்திருந்தார்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துருவ் விக்ரம் அடுத்ததாக ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ படத்தில் நடித்து வருகிறார். கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தில் அவர் ஸ்டண்ட் கலைஞராக நடிக்கிறார்.

இதையும் படிங்க : பாலியல் புகார் எதிரொலி.. பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத் தலைப்புக்கு எதிர்ப்பு.. டிசம்பர் 7-ல் சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டம்.. கிருஷ்ணசாமி அறிவிப்பு
Sandiyar Title Controversy

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத் தலைப்புக்கு எதிர்ப்பு.. டிசம்பர் 7-ல் சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டம்..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com