Gold Price Today: தொடர்ந்து 16 நாட்களாக சரிவைச் சந்தித்த தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,080 அதிகரித்து ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
Gold Price Today: தொடர்ந்து 16 நாட்களாக சரிவைச் சந்தித்த தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,080 அதிகரித்து ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

Published on: November 23, 2026 at 5:05 pm
சென்னை, நவ.23, 2026: தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்தது. குறிப்பாக, கடந்த நவம்பர் 10-ம் தேதி முதல் தங்கத்தின் விலை இறங்குமுகத்தில் இருந்து வந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறையும் என்ற எதிர்பார்ப்பு நகை வாங்குவோர் மத்தியில் நிலவியது.
கடந்த நவம்பர் 18-ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040-ம், 19-ம் தேதி ரூ.1,880-ம் தங்கம் விலை குறைந்தது. தொடர்ந்து நவம்பர் 20-ம் தேதி சவரனுக்கு ரூ.3,760 குறைந்து, கிராமுக்கு ரூ.470 சரிந்தது. இதன் தொடர்ச்சியாக நவம்பர் 21-ம் தேதி சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720-க்கு விற்பனையானது.
இவ்வாறு கடந்த 16 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.15,360 வரை குறைந்த தங்கம் விலை, இன்று திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,080 அதிகரித்து ரூ.92,800-க்கும், கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க தங்கம், வெள்ளி விலை சரிவு ஏன்? இதுதான் உண்மை காரணமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com