Gold Price Today: தங்கம் விலை தொடர்ந்து சரியும் நிலையில், இன்று பவுன் ரூ.91,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold Price Today: தங்கம் விலை தொடர்ந்து சரியும் நிலையில், இன்று பவுன் ரூ.91,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published on: November 22, 2026 at 1:08 pm
சென்னை, நவ.22, 2026: சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 22) ஆபரணத் தங்கம் ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் ரூ.91,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று ரூ.45 குறைந்து ரூ.11,465 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இன்றும் அதே விலையில் தொடர்கிறது. நேற்று முன்தினம் (நவம்பர் 20) ஒரு பவுன் தங்கம் ரூ.92,080-க்கும், ஒரு கிராம் ரூ.11,510-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 13 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.15,360 குறைந்துள்ளது. ஜனவரி 29-ம் தேதி ஒரு பவுன் ரூ.1,34,400 என்ற உச்ச விலையை எட்டிய நிலையில், தற்போது ரூ.42,680 குறைந்துள்ளது. இது சுமார் 31.8 சதவீத சரிவாகும்.
இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1.75 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது
இதையும் படிங்க : பி.எஃப் பணம் எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றம்: 90 சதவீதம் வரை பணம் பெறலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com