Parampara Book Release : இந்தியாவின் ஆன்மிகம், கலாச்சார மரபுகளை விளக்கும் பவன் கௌஷிக்கின் புதிய நூல் ‘பரம்பரா’ புதுடெல்லியில் வெளியீடப்பட்டது.
Parampara Book Release : இந்தியாவின் ஆன்மிகம், கலாச்சார மரபுகளை விளக்கும் பவன் கௌஷிக்கின் புதிய நூல் ‘பரம்பரா’ புதுடெல்லியில் வெளியீடப்பட்டது.

Published on: November 20, 2026 at 8:27 pm
புதுடெல்லி, நவ.20, 2026: இந்திய எழுத்தாளர் பவன் கௌஷிக்கின் ஐந்தாவது நூலான பரம்பரா தி ஸ்டோரீஸ் ஆஃப் ஃபெயித் அண்ட் டிரெடிசன்ஸ் (PARAMPARA – The Stories of Faith and Traditions- பரம்பரா) நவம்பர் 2026-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தொன்மையான ஆன்மிக நம்பிக்கைகள், மதச் சடங்குகள் மற்றும் கலாச்சார மரபுகளின் முக்கியத்துவத்தை இந்த நூல் எடுத்துரைக்கிறது.
சனாதன தர்மம், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூல், ஆரத்தி, பிரசாதம், சரணாமிர்தம், கலாவா, திலகம், புனித எண் 108 உள்ளிட்ட மரபுகளின் பின்னணியில் உள்ள அர்த்தங்களை விளக்குகிறது. மேலும், இந்தியத் திருமணச் சடங்குகளான ஜெய்மாலா, ஏழு சுற்றுகள், முக்காடு மற்றும் மாங்கல்யத்தின் அடையாளங்களையும் எடுத்துரைக்கிறது.
பண்டைய ஞானத்தையும் நவீன வாழ்க்கையையும் இணைக்கும் வகையில், மனித நடத்தை, உறவுகள், தலைமைப் பண்பு, குணநலன் மற்றும் கர்மா போன்ற தலைப்புகளும் இடம்பெற்றுள்ளன. கேதார்நாத்தில் மோசமான வானிலையின்போது பக்தர் ஒருவருக்கு முதியவர் ஒருவர் உதவி செய்துவிட்டு மாயமாகும் சம்பவமும் நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வை வாசகர்கள் தங்களது நம்பிக்கையின் அடிப்படையில் புரிந்துகொள்ளும் வகையில் ஆசிரியர் அமைத்துள்ளார்.
மரபுகள் வெறும் பழக்கவழக்கங்கள் மட்டுமல்ல; அவை அனுபவங்கள், நம்பிக்கைகள் மற்றும் ஞானத்தைத் தாங்கியவை என்று பவன் கௌஷிக் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் மரபுகளை ஏற்றுக்கொள்ளவும் கேள்வி எழுப்பவும் உரிமை உண்டு என்பதே நூலின் முக்கியச் செய்தியாகும். 35 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவம் கொண்ட இவர், தி ஃபிப்த் எஸ்டேட் (The Fifth Estate), கசப் ஸிந்தகி (Gazab Zindagi), வீ ஆல் ஹவ் ஜிங்க் இன் அவர் லிவ்ஸ் (We All Have Zinc In Our Lives) உள்ளிட்ட உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க சிக்கலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள்.. உலக நாடுகளிலிருந்து நோயாளிகள் வருகை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com