IndiGo Flight Cancellation: சவூதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஜெட்டா, மதீனா, ரியாத், தம்மாம் ஆகிய நான்கு முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளை நவம்பர் 30-ஆம் தேதி வரை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது.
IndiGo Flight Cancellation: சவூதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஜெட்டா, மதீனா, ரியாத், தம்மாம் ஆகிய நான்கு முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளை நவம்பர் 30-ஆம் தேதி வரை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது.

Published on: November 19, 2026 at 6:13 pm
புதுடெல்லி, நவ.19, 2026: சவூதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்பு நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டின் ஜெட்டா, மதீனா, ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் நவம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு, அவர்கள் விமானப் பதிவின்போது அளித்துள்ள தொடர்பு விவரங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தங்களது முதன்மையான நோக்கம் என்றும், தற்போதைய பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே, ஏமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெற்கு சவூதி அரேபியாவை நோக்கி ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் இடைமறித்து அழித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தென்மேற்கு சவூதி அரேபியாவில் உள்ள அபா நகரம் மற்றும் கமீஸ் முஷைத் பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆபத்து கடந்த பின்னர் அந்த எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: காவல் நிலையம், எம்.பி. வீடு தீக்கிரை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com