வெலிங்டன் டெஸ்ட் இன்று தொடக்கம்.. இந்தியா – நியூசிலாந்து மோதல்!

Wellington Test 2026: வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இன்று (நவ.19, 2026) தொடங்குகிறது. இதில் இந்தியா – நியூசிலாந்து மோதுகின்றன.

Published on: November 19, 2026 at 11:43 am

வெலிங்டன், நவ.19, 2026: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (நவம்பர் 19) நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் தொடங்குகிறது. இப்போட்டி அங்குள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாகவும், நியூசிலாந்து அணிக்கு டாம் லாதம் கேப்டனாகவும் செயல்படுகின்றனர். இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகளைப் பெறும் நோக்கில் களமிறங்குகின்றன.

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் டெஸ்ட் அணிக்குத் திரும்பியிருப்பது கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடும் நியூசிலாந்து அணியும் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கத் தயாராக உள்ளது.

ஐந்து நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டி நவம்பர் 23ஆம் தேதி நிறைவடைகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்குப் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 27ஆம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்க உள்ளது.

இதையும் படிங்க : அஸ்வின், படேலுக்குப் பிறகு தரமான ஆஃப் ஸ்பின்னர் இல்லாதது ஆச்சரியம்.. தீபக் படேல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com