தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 சரிவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது!

Gold Silver Price Drop: தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 சரிவு விற்பனையாகிறது; வெள்ளியை பொறுத்தமட்டில் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து காணப்படுகிறது.

Published on: November 16, 2026 at 2:44 pm

Updated on: November 16, 2026 at 2:45 pm

சென்னை, நவ.16, 2026: தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று (நவ.16) அதிரடியாகக் குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.12,540-க்கும், சவரனுக்கு ரூ.600 சரிந்து ரூ.1,00,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.13,680-க்கும், 8 கிராமுக்கு ரூ.1,09,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.190-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 சரிந்து ரூ.1,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில், ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்தக் கணிசமான சரிவு நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : திருமண சீசனுக்கு முன்பே சரியும் தங்கம், வெள்ளி விலை.. முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com